TamilsGuide

கொழும்பு பிரதான வீதியில் காரும் – வேனும் மோதி கோர விபத்து; மூவர் உயிரிழப்பு

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் முந்தலம் பகுதியில் காரொன்றும் வேனொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது காரில் பயணித்த இரண்டு பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் முந்தலம் பகுதியில் காரொன்றும் வேனொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

Leave a comment

Comment