TamilsGuide

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக வைத்தியர் ஹில்மி முஹைதீன் பாவா நியமனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக வைத்தியர். ஹில்மி முஹைதீன் பாவா நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தேசிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனால் நேற்று  இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தின், வட்டாரங்களுக்கான அமைப்பாளர்களை நியமிக்கும் நிகழ்வு கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

கட்சியின் நீண்டகால செயற்பாட்டாளரான இவர் கட்சியின் கல்வி, சமய மற்றும் கலாச்சார பிரிவுக்கான பணிப்பாளராகவும், உயர்பீட உறுப்பினராகவும் செயற்பட்டு கட்சிக்கு அர்ப்பணித்தவராவர்.

இந்நிகழ்வில், தேசிய அமைப்பாளரும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹீர் மற்றும் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயற்குழு செயலாளர் அனீஸ் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
 

Leave a comment

Comment