TamilsGuide

இடமாற்றம் பெற்றுச் சென்ற வைத்தியர்களுக்கு பிரியாவிடை

வேலணை வைத்தியசாலையில் கடமையாற்றி, இடமாற்றம் பெற்றுச் சென்ற வைத்தியர்களுக்கு வேலணை வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கம் சேவையை கௌரவித்து நன்றிகூறி பிரியாவிடை செய்துள்ளது. குறித்த நிகழ்வு நேற்றையதினம் நடைபெற்றது.

பிரியாவிடை நிகழ்வில் வைத்தியர் கபிலன் மற்றும் வைத்தியர் அபிரா ஆகிய இரு வைத்தியர்களுக்கே பிரியாவிடையுடனான நன்றிகூறல் வழங்கப்பட்டது.

வேலணை வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட

இந்த நிகழ்வில் பிரதேசத்தின் அரசில் பிரமுகர்கள், நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் வைத்தியசாலை ஊழியர்கள் என பலர் கலந்து வைத்தியர்களின் சேவையை நினைவுகூர்ந்து பாராட்டியிருந்ததுடன், பொன்னாடை போத்தி, நினைவுப் பரிசில்களை வழங்கி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment