TamilsGuide

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - சிறுமி உள்பட 6 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் செடார்ப்ளப் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 7 வயது சிறுமி உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

முதலில் தந்தை உள்பட 3 பேரை கொன்ற அவர் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் வேறு ஒரு இடத்தில் சிறுமி மற்றும் தனது 2 சகோதரர்களை சுட்டுக் கொன்றார்.

தகவல் அறிந்ததும் பொலிஸார் தப்பி ஓடிய வாலிபரை தீவிரமாக தேடி கைது செய்தனர். விசாரணையில் அவர் 24 வயதான டாரிக்கா எம் மூர் என்பது தெரியவந்தது.

அவர் தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். டாரிக்கா எம் மூர் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

அவர் மீது முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இதற்கு முன்பு அவர் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
 

Leave a comment

Comment