TamilsGuide

கனடாவில் ஒரே நாளில் நடந்த இரு கொலைகள்  - ஒருவருக்கு ஆயுள் தண்டனை

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், கிரெஸ்டன் நகரைச் சேர்ந்த மிட்செல் மெக்இன்டையர் என்பவருக்கு, ஒரே நாளில் நடந்த இரண்டு கொலைகள் தொடர்பாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு மரணங்களும் ஆரம்பத்தில் இயற்கை காரணங்களால் ஏற்பட்டவை எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2022 பிப்ரவரி 6 ஆம் திகதி கிரெஸ்டனில் உள்ள ஒரு வீட்டில் ஜூலியா ஹவ் என்பவர் தலையில் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், இரண்டாம் நிலை கொலை குற்றத்திற்காக மெக்இன்டையருக்கு 13 ஆண்டுகள் பரோல் இன்றி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அதே நாளில், கிரெஸ்டனிலிருந்து சுமார் 133 கிலோமீட்டர் வடகிழக்கே உள்ள கிம்பர்லி நகரில், டேவிட் கிரீமர் என்பவர் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தில் மனிதபடுகொலை குற்றத்திற்காக மெக்இன்டையருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அது ஆயுள் தண்டனையுடன் இணைந்து அனுபவிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, இரு சம்பவங்களிலும் முதலில் மரண விசாரணை அதிகாரிகள் விழுந்து ஏற்பட்ட விபத்துகள் எனக் கருதி, சந்தேகமில்லாத மரணங்களாக பதிவு செய்தனர்.

ஜூலியா ஹவ் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தது, மரணத்திற்கு இரண்டு நாட்கள் பின்னர் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வில் மட்டுமே தெரியவந்தது.

டேவிட் கிரீமரின் மரணம் விபத்து எனத் தீர்மானிக்கப்பட்டதால், அவரது உடல் தகனம் செய்யப்பட்டு, அந்த வழக்கில் “எந்தவிதமான குற்றவியல் ஆதாரங்களும் சேகரிக்கப்படாத” நிலை ஏற்பட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 
 

Leave a comment

Comment