இலங்கை தபால் திணைக்களம் கடந்த ஆண்டு திறைசேரியினால் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்கை கடந்து அதிக வருமானம் ஈட்டியுள்ளதாக தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்
நீண்ட காலமாக அரசாங்கத்தால் உரிய முறையில் கவனம் செலுத்தப்படாத இலங்கை அஞ்சல் சேவைகள், கடந்த ஆண்டில் சிறந்த முன்னேற்றத்தை அடைந்து உள்ளதாக தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்காக திறைசேரியால் இலங்கை தபால் துறைக்கு வழங்கப்பட்ட வருமான இலக்கை விட, 13,100 மில்லியன் ரூபா வருவாய் ஈட்டப்பட்டுள்ளது
கடந்த ஆண்டில், இலங்கை தபால்துறைக்கு புதிய ஆட்சேர்ப்புக்கள் மற்றும் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது .
கடந்த ஆண்டு பொலன்னறுவையில் புதிய தபால் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டதுடன் மேலும் புதிய அலுவலகங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
அதன்படி, தம்புள்ளை பிராந்திய தபால் பரிமாற்ற மையம் உட்பட 14 தபால் நிலையங்களில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் நுவரெலியா மாவட்ட தபால் அலுவலக கட்டிடம் மற்றும் தபால் அலுவலக அறை ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, இலங்கை தபால் சேவையின் 378 துணை தபால் மா அதிபர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும் தபால் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்
அத்துடன் 2022 ஆம் ஆண்டிற்கு பின்னர் 1000 தபால் உதவியாளர்களின் நியமனங்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளதுடன் 600 தபால் சேவை அதிகாரிகள் எதிர்வரும் மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


