சின்னத்திரையில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள தொகுப்பாளினிகளில் ஒருவர் திவ்யதர்ஷினி. இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய பிரபலம் ஆவார்.
தனது போட்டோஷூட் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வரும் திவ்யதர்ஷினி, தனது சகோதரரின் திருமணத்தில் பட்டுப்புடவையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.


