தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். நடிகராக தொடர்ந்து பயணித்து வந்த இவர் தற்போது இயக்குநராகவும் களமிறங்கியுள்ளார். யோகி பாபுவை வைத்து An Ordinary Man என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
ரவி மோகன் நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் பராசக்தி. இப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். படம் பார்த்தவர்கள் அனைவரும் ரவி மோகனின் நடிப்பை பாராட்டி பேசினார்கள்.
ஒவ்வொரு புதிய படம் வெளிவரும் போதும், அப்படத்தில் பணியாற்றிய பிரபலங்களின் சம்பளம் குறித்து விவரம் வெளிவரும். இந்த நிலையில், பராசக்தி படத்தில் நடித்ததற்காக ரவி மோகன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் ரவி மோகன் ரூ. 15 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.


