TamilsGuide

2024 இல் உலகளாவிய ராணுவ செலவு 2.7 டிரில்லியன் அமெரிக்க டொலர் - WHO தலைவர் வருத்தம்

2024 இல் உலகளாவிய ராணுவ செலவு 2.7 டிரில்லியன் அமெரிக்க டொலர் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம்  கெப்ரியேசஸ்  (Dr. Tedros Adhanom Ghebreyesus) வருத்தம் வெளியிட்டுள்லார்.

இது தொடர்பில் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் (Dr. Tedros Adhanom Ghebreyesus)  வெளியிட்ட வெளியிட்ட செய்தியில்,

2024-ம் ஆண்டு உலக அளவில் ராணுவத்திற்காக செலவிடப்பட்ட தொகை சாதனை அளவாக 2.7 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

எனினும், உலகளாவிய சுகாதார திட்டங்களுக்கு செலவிடுதல் பெரிய அளவில் சரிவடைந்து உள்ளது. இந்த உலகத்திற்கு உயிர்களை பாதுகாப்பதில் பெரிய அளவில் கவனம் செலுத்துவதே தற்போது தேவையாக உள்ளது.

போர்களை தீவிரப்படுத்துவதில் அல்ல. அமைதியே சிறந்த மருந்து என  உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் (Dr. Tedros Adhanom Ghebreyesus)  தெரிவித்து உள்ளார்.

Leave a comment

Comment