TamilsGuide

பல கோரிக்கைகளை முன்நிறுத்தி பாரிய பேரணியை முன்னெடுப்பதற்கான அழைப்பு

இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதல் தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்களாகிய நாம் திட்டமிட்டு அடக்கப்பட்டு இனப்படு கொ*லைக்கு ஆளாகி ஒடுக்கப்படுக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் பல கோரிக்கைகளை முன்நிறுத்தி வடக்கு கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம், சிவில் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன இணைந்து பாரிய பேரணியை முன்னெடுப்பதற்காக அழைப்பு விடுக்கின்றோம் என சிவில் செயற்பாட்டாளர் இருதயம் செல்வகுமார் தெரிவித்தார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் 04.02.2026 ஸ்ரீலங்காவில் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள். 04.02.1948 அன்று பிரித்தானிய காலணித்துவ ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரம் அனைத்தையும் சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் ஒப்படைத்த நாள். அந்நாளில் இருந்து தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்களாகிய நாம் திட்டமிட்டு அடக்கப்பட்டு இனப்படு கொலைக்கு ஆளாகி ஒடுக்கப்படுக் கொண்டிருக்கின்றோம்.

எனவே வருகின்ற  04.02.2026 அன்றைய நாளை கரி நாளாக பிரகடனப்படுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தலைமை ஏற்று இணைந்து நடாத்தும் பேரணியானது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீக தாயகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்,தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் தமிழ் மக்களின் தேசிய உரிமையை அங்கீகரிக்க வேண்டும், தமிழ் இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படவர்களுக்குமான நிரந்தர பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும்

இலங்கை அரசு கையகப்படுத்தியுள்ள தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை விடுவிப்பதோடு, தமிழர் தாயகத்தை பல்வேறு வகையில் புத்தவிகாரைகளை நிறுவியும் தொல்பொருள் திணைக்கழத்தின் அதிகாரங்களை பயன்படுத்தி கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த  வேண்டும், “பயங்கரவாதத் தடைச்சடம்” என்ற பெயரில் இன்றும் தொடரும் தமிழின அடக்குமுறைகளை நிறுத்தி, நீண்டகாலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் , கடந்த 77 ஆண்டுகளாகத் தொடரும் தமிழர் இனவழிப்பை நிறுத்தி, ஓர் சர்வதேச நீதிப்பொறிமுறை மூலம் தமிழர்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்யப்பட வேண்டும்

வடக்கு  கிழக்கு  இணைந்ந தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பதையும், தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் திம்பு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இறையாண்மை உள்ள தேச அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
 

Leave a comment

Comment