TamilsGuide

கரடியனாறு அம்பகஹவத்தை பிரதேசத்தில்யானை உயிரிழப்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய புல்லுமலை அம்பகஹவத்தை பிரதேசத்தில் காணி ஒன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் யானை  தாக்கியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உள்ள தனது காணியில் பயிரப்பட்ட பயிர்களை காட்டு விலங்குகளில் இருந்து காப்பாற்றுவதற்காக காணி உரிமையாளர் காணியை சுற்றி சட்டவிரோதமாக மின்சார வேலி அமைத்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினமான நேற்று யானை ஒன்று மின்சார வேலியில் மோதியதை அடுத்து மின்சாரம் தாக்கியதில் யானை உயிரிழந்துள்ளது இது தொடர்பாக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் பொலிசார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment