TamilsGuide

மட்டக்களப்பு- கொழும்பு கடுகதி புகையிரத நேரடி சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

அசாதாரண சூழ்நிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புலத்தேசி கடுகதி புகையிரத சேவை நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு , போக்குவரத்து அமைச்சருக்கு விடுத்த வேண்டுகோளின் பெயரில் இந்த பபுகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வாரஇறுதியில் பொதுமக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவையானது நேற்று நண்பகல் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கான கடுகதி சேவையை முன்னெடுத்திருந்தது.

மட்டக்களப்பில் இருந்து மீண்டும் நாளை நண்பகல் கொழும்புக்கான கடுகதி சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையை கட்டி எழுப்பும் நோக்குடன் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டிருந்த புகையிரத சேவை கட்டம் கட்டமாக அபிவிருத்தி பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

எதிர்காலத்தில் பொதுமக்கள், மாணவர்களின் நலன் கருதி இந்த சேவையானது மேலும் விஸ்தரிக்கப்பட உள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment