TamilsGuide

பராசக்தி படத்தில் 25 இடங்களில் சென்சார் கட்- பட்டியலை வெளியிட்ட தணிக்கைக் குழு

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'பராசக்தி'. சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10 வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்கப்படாததால் படம் குறித்த தேதிக்கு வெளியாகுமா என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தனர்.

இந்நிலையில் பராசக்தி படத்திற்கு U/A சான்றிதழை மத்திய தணிக்கை வாரியம் வழங்கி உள்ளது.மத்திய தணிக்கை வாரியம் சான்று வழங்கியதை அடுத்து நாளை திட்டமிட்டபடி பராசக்தி திரைப்படம் வெளியாகிறது.

இந்நிலையில், பராசக்தி திரைப்படத்தில் 25 இடங்களில் சென்சார் கட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை குழு சான்றிதழில் வெளியாகியுள்ளது.

25 இடங்களில் சென்சார் கட்டிற்கு பின் பராசக்தி படத்தின் நீளம் 3 மணிநேரம் 5 நிமிடங்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பராசக்தி படத்தில் தீ பரவட்டும் என்ற வார்த்தைக்கு பதிலாக நீதி பரவட்டும் என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தணிக்கை வாரியம் தரப்பபில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொழியைத் திணிப்பதால் ஏற்படும் பிரிவினையை குறித்த பின்னணிக் குரல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பராசக்தி படத்தில் இந்தி திணிப்பு தொடர்பாக சில குறிப்பிட்ட வசனங்கள் மற்றும் வாசகங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

படத்தில் பயன்படுத்தப்பட்ட சில சொற்கள் மற்றும் குறிப்பிட்ட சாதி இனத்தை குறிக்கும் வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளன.

இந்தி அரக்கி என்ற வார்த்தையும் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்தி என் கனவை அழித்தது என்ற வசனத்தையும் தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.


 

Leave a comment

Comment