TamilsGuide

அம்பேகமுவ பிரதேசத்தில் கஞ்சா செடிகள் சுற்றிவளைப்பு

மொனராகலை, தனமல்வில, அம்பேகமுவ பிரதேச வனப் பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பிலான கஞ்சா சேனையொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மொனராகலை மாவட்ட விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த கஞ்சா சேனை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதோடு, கஞ்சா செடிகளையும் தீயிட்டு எரித்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment