TamilsGuide

முந்தைய அரசாங்க காலத்தின்போது திரும்பப் பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்

2019, 2024 ஆம் ஆணடுகளுக்கு இடையில் மீளப் பெறப்பட்ட 65க்கும் மேற்பட்ட வழக்குகள் தற்போதைய அரசாங்கத்தால் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (09) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர், 2019 முதல் 2024 வரை லஞ்ச ஒழிப்பு ஆணையம் மற்றும் சட்டமா அதிபரால் 102 வழக்குகள் மீளப் பெறப்பட்டுள்ளதாகக் கூறினார்.

பல்வேறு காரணங்களுக்காக முந்தைய அரசாங்கங்களின் போது மீளப் பெறப்பட்ட வழக்குகள், அவற்றை மறுபரிசீலனை செய்த பின்னர் மீண்டும் தாக்கல் செய்யப்படும் என்று தேசிய மக்கள் சக்தி (NPP) தனது தேர்தல் பிரச்சாரத்தில் உறுதியளித்ததாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

34 வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்வதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

அதே நேரத்தில் மேலும் மூன்று வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.
 

Leave a comment

Comment