TamilsGuide

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் எட்டாவது சபை அமர்வு

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் எட்டாவது சபை அமர்வு நேற்று களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்ற இச்சபை அமர்வில் உப தவிசாளர் வசீகரன், உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வெளிநாடுகளின் தரத்தில் இயங்குவது போன்று இப்பிரதேசத்தில் 12 ஆங்கில மொழிமூல பாலர் பாடசாலைகளை நிறுவுதல். அதில் முதற்கட்டமாக துறைநீலவணைக் கிராமத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் ஆரம்பித்தல், அதற்காக மாணவர்களிடமிருந்து எதுவித கட்டணமும் அறவிடாமல் இலவசமாக மாணவர்களுக்கு ஆங்கில மொழிமூலம் கல்வி அறிவூட்டுதல். பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளைப் புனரமைப்புச் செய்தல், வீதி மின் விளக்குகளைப் பொருத்துதல், உள்ளிட்ட பல தீர்மானங்கள் வாத பிரதிவாதங்களுடன் எடுக்கப்பட்டன.
 

Leave a comment

Comment