TamilsGuide

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் தேசிய டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலைகள் , தனியார் கல்வி நிலையங்களில் சூழ பல்வேறு இடங்களில் தேசிய டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாள் கள விஜயம்  முன்னெடுக்கப்பட்டது.

டெங்கு அபாயம் பரவுக்கூடிய பல்வேறு இடங்கள் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டதுடன், அவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தனியார் கல்வி நிலையங்களில் சகல உட்கட்டமைப்பு வசதிகளும் 02 வாரங்களுக்குள் சீர் செய்யப்பட வேண்டும் என தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜினால் கடுமையான உத்தரவு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

டெங்கு பரவும் அபாயம் உள்ள சகல தனியார் கல்வி நிலையங்களும் உடனடியாக சுத்தப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment