இஸ்ரேலில் உள்ள ரஷ்ய அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அவசரமாக அந்நாட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை ரஷ்யா முன்னெடுத்து வருவதாக இஸ்ரேலிய சேனல் 14 செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வெளியேற்ற நடவடிக்கைகள் வழக்கத்தை விட வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் முக்கியமான பாதுகாப்பு அல்லது உளவுத்தகவல்கள் மாஸ்கோவிற்கு சென்றடைந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிடுகிறது.
இந்த நிலைமை, பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


