• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அடுத்த மாதம் இந்தியா வருகிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

பிரான்சில் கடந்த ஆண்டு சா்வதேச செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டு உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் அதிபர் மேக்ரானுடன், பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, இருதரப்பு பேச்சுவார்த்தை, வணிக நிறுவன தலைவர்களுடன் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

இந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். பாரீசில் உள்ள எலிசி அரண்மனையில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பும், விருந்தும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அதிபர் இம்மானுவல் மேக்ரான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த ஆண்டு, நாங்கள் AI பற்றிய ஒரு உச்சி மாநாட்டை நடத்தினோம். உலகம் முழுவதும் எங்களைப் பார்க்க வந்தது. பிரதமர் மோடியும் எங்களிடம் இருந்தார். அடுத்த மாதம், இந்த முயற்சிகளைத் தொடர நான் இந்தியா செல்கிறேன் என தெரிவித்தார்.
 

Leave a Reply