• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடலோர ரயில் மார்க்கத்தில், அம்பலாங்கொட, கரித்தகந்தை பகுதிக்கு அருகே விபத்து – ரயில் சேவைகள் பாதிப்பு

இலங்கை

கடலோர ரயில் மார்க்கத்தில், அம்பலாங்கொட, கரித்தகந்தை பகுதிக்கு அருகே லொறி ஒன்று தண்டவாளத்தில் வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

தண்டவாளத்தில் லொறி சிக்கியுள்ளதால், குறித்த மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து காரணமாக சுமார் 5 அலுவலக ரயில்கள் தற்போது தாமதமாக இயங்குவதாக அம்பலாங்கொட பொலிஸ் தெரிவித்துள்ளது.

தண்டவாளத்தில் சரிந்துள்ள லொறியை அகற்றி, ரயில் மார்க்கத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 

Leave a Reply