TamilsGuide

20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகிறது சீமானின் தம்பி

சமீப காலமாக 90கள் மற்றும் 2000களின் ஹிட் படங்கள் பலவும் 4K தொழில்நுட்பத்தில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் ரீ ரிலீஸ் கலாச்சாரத்தில் சீமானின் 'தம்பி' படமும் இணைந்துள்ளது. சீமான் இயக்கத்தில், மாதவன் நடிப்பில் கடந்த 2006ல் வெளியான 'தம்பி' திரைப்படம் 20 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வரும் பிப்ரவரி மாதம் தம்பி படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. 
 

Leave a comment

Comment