ஜனநாயகன் ப்ரீ புக்கிங் கலெக்ஷன் - இதுவரை இத்தனை கோடி வசூலா
சினிமா
தளபதி விஜய் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் படம் வருகிற 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
ஆனால், இதுவரை இப்படத்திற்கான தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதற்காக படக்குழுவினர் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், நேற்று நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதை தொடர்ந்து இன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து இன்று மாலைக்குள் தணிக்கை சான்றிதழ் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.
சரி, இந்த பிரச்சனை எல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஜனநாயகன் படத்தின் முன்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவில் ரூ. 50 கோடி வசூல் வந்துள்ளது.
ரிலீஸுக்கு முன் ரூ. 100 கோடிக்கும் மேல் முன்பதிவு வசூல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என திரையுலகினர் கூறுகின்றனர்.






















