• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஏ.ஆர்.ரகுமானுக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

சினிமா

தமிழ் சினிமாவின் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

இசையால் எல்லைகளைக் கடந்து, எட்டுத்திக்கும் ஆளும் அன்பு இளவல் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

உங்களது இசையைப் போலவே நீங்களும் என்றும் இளமையோடும் துள்ளலோடும் திகழ்ந்து, தொடர்ந்து சாதனைகளைப் படைத்திட விழைகிறேன் என்று கூறியுள்ளார். 
 

Leave a Reply