ட்ரைலர் வரவேற்பைத் தொடர்ந்து தணிக்கை சான்றிதழ் பெற்ற பராசக்தி!
சினிமா
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பராசக்தி. சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றநிலையில், நேற்று படத்தின் டிரெய்லர் வெளியானது. டிரெய்லரில் இடம்பெற்ற வசனங்கள் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துவரும் நிலையில் இன்று படம் குறித்த மற்றொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பொங்கலை முன்னிட்டு பராசக்தி ஜன.10ஆம் தேதி வெளியாக உள்ளது. அதேநேரத்தில் பராசக்திக்கு முன்பு வெளியாக உள்ள விஜய்யின் ஜன நாயகனுக்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






















