• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு Chartered Accountants of Sri Lanka இனால் 10 மில்லியன் ரூபா நன்கொடை

இலங்கை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் செயல்படுத்தும் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Chartered Accountants of Sri Lanka, 10 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியுள்ளது.

அதற்கான காசோலையை Chartered Accountants of Sri Lanka வின் தலைவர் திஷான் சுபசிங்க, உப தலைவர் அனோஜி டி சில்வா, முன்னாள் தலைவர் ஹேஷன குருப்பு மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி லக்மாலி பிரியங்கிகா ஆகியோர் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்துள்ளனர்

இந்த நிகழ்வில் வர்த்தக நாமம் மற்றும் நிறுவன தொடர்பாடல் பிரதானி உதார ஜயசிங்கவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
 

Leave a Reply