• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிக வெளிநாட்டு பணம் அனுப்பப்பட்ட ஆண்டாக 2025 பதிவு

இலங்கை

2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கைக்கு அதிக வெளிநாட்டு பணம் அனுப்பப்பட்ட ஆண்டாக 2025 ஆம் ஆண்டு மாறியுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த ஆண்டில் 7.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இன்று (05) காலை நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போது அவர் கூறினார்.

இது 2016 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட முந்தைய உச்சமான 7.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை விட அதிகமாகும்.

2025 ஆம் ஆண்டில் 2,362,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் 3.2 பில்லியன் அமெரிக்க டொலர் மொத்த வருவாய் ஈட்டப்பட்டதன் மூலம் சுற்றுலாத் துறையில் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா மூலம் கிடைக்கும் மொத்த வருவாய் மாத்திரம் தனது அமைச்சின் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு சுமார் 11 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பங்களித்ததாகவும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.
 

Leave a Reply