• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (05) காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளிக்க ஆஜரான பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

அதற்கமையவே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்றைய தினம் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சருடன் அவரது இளைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

Leave a Reply