• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் திடீரென மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சிக்கிய பொருட்கள்

கனடா

கனடாவின் பேரி நகரில், சந்தேகத்துக்கிடமான முறையில் திடீரென யூ-டர்ன் எடுத்த ஒரு வெள்ளை நிற பிக்கப் வாகனத்தை பொலிஸார் நிறுத்தி சோதனை செய்த போது, துப்பாக்கி, பல்வேறு கத்திகள் மற்றும் கணிசமான அளவு கனடிய பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

பேய்பீல்ட் வீதி மற்றும் க்ராவ் வீதி என்பனவற்றுக்கு அருகிலுள்ள ஒரு மேட்டுப் பகுதியில், அந்த வாகனம் திடீரென திரும்பியதை கவனித்த பொலிஸார், உடனடியாக வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

வாகன சோதனையின் போது, பல வகையான கத்திகள், 40-கேலிபர் துப்பாக்கி ஒன்று (ஏற்றப்பட்ட நிலையில்), கணிசமான அளவு கனடிய பணம் என அனைத்தும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக, 26 வயதுடைய டொரோண்டோவைச் சேர்ந்த ஆண் ஒருவர், 45 வயதுடைய டொரோண்டோவைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட துப்பாக்கியை வைத்திருத்தல், தடை செய்யப்பட்ட துப்பாக்கி வைத்திருப்பது குறித்து அறிவுடன் செயல்பட்டல், துப்பாக்கியை அலட்சியமாக வைத்திருத்தல், குண்டுகளுடன் துப்பாக்கி வைத்திருத்தல், ஆபத்தான நோக்கத்திற்காக ஆயுதம் வைத்திருத்தல், தடை செய்யப்பட்ட ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் இந்த இருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 
 

Leave a Reply