லொள்ளு சபா நிகழ்ச்சி இன்றும் பலருடைய மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இருந்து சந்தானம், யோகி பாபு, சுவாமிநாதன் என பல பிரபலங்கள் திரையுலகில் கலக்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர்தான் வெங்கட்ராஜ்.
லொள்ளு சபா மட்டுமின்றி வெள்ளித்திரையில் வெளிவந்த சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடித்த மனிதன் படத்தில் அவருக்கு பாதுகாவலராக நடித்திருப்பார்.
காலமானார்
இந்த நிலையில், நடிகர் வெங்கட் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.


