TamilsGuide

என் செந்தமிழை காக்க பெரும்சேனை ஒன்று உண்டு - பராசக்தி டிரெய்லர்

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி. அதர்வா, ஜெயம்ரவி, ஸ்ரீலீலா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ஜனநாயகனுக்கு போட்டியாக ஜன.10ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் பாடல்கள், டீசர் எல்லாம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நேற்று இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. டிரெய்லரில், டெல்லிதான் இந்தியாவா?, எங்களுக்கு இந்தி திணிப்புதான் எதிரியே தவிர, இந்தி மொழியோ, அதைப்பேசும் மக்களோ கிடையாது, 'என் செந்தமிழை காக்க பெரும்சேனை ஒன்று உண்டு' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. 
 

Leave a comment

Comment