இலங்கையின் கல்வி மறுசீரமைப்பு அடிப்படையில் தரம் 06பாட நூலில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன .
இந்த குளறுபடிகள் ஏற்படுவதற்கு காரணம் கல்வி அமைச்சின் உடைய பிழையான செயற்பாடுகள் என கூறவேண்டும் .
தேசிய கல்வி நிறுவனத்தின் இயக்குனர் பதவி விலகி இருக்கிறார் அது மட்டும் போதாது இதற்கு முலுமையான பொறுப்பினை கல்வி அமைச்சி கூற வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார் .
கொட்டகலை பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
2022ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தலைமையில் இடம்பெற்ற கல்வி மறுசீரமைப்பில் நான் தான் தலைவராக செய்யப்பட்டேன்.
அந்த காலப்பகுதியில் அமெரிக்காவின் உதவியோடு கல்வி சீரமைப்பு திட்டங்களை முன்னெடுத்தோம் ஆனால் அதனை முற்றும் முழுதுமாக புறந்தள்ளிவிட்டு புதிய ஒரு கல்வி சீரமைப்பு திட்டத்தை கொண்டுவந்து மாணவர்களுக்கு பொருத்தமற்ற ஒரு விடயத்தை கொண்டு வந்துள்ளார்கள்.
ஆகவே இந்த முறைமையினை நாங்கள் முற்றாக எதிர்க்கின்றோம் இதற்கான பொறுப்பை கல்வி அமைச்சி ஏற்கவேண்டும்.
நாட்டின் பிரதமராக இருக்கின்ற கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்ய பொறுப்பு கூற வேண்டும் என குறிப்பிட்டார் .


