நடிகர் அஜித்குமாரின் ரேசிங் மீதான ஆர்வம் மற்றும் பந்தயத்தில் அவர் செய்த சாதனைகளை குறித்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் தயாரித்து வருகிறார்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், சிறுத்தை சிவா, ஆதிக் ரவிச்சந்திரன், விஷ்ணுவர்தன் ஆகியோருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


