TamilsGuide

கம்பேக் கொடுத்த நிவின் பாலி - ரூ.100 கோடி வசூலை குவித்த சர்வம் மாயா

15 வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் திரைப்படம் வெளியானது. இப்படத்தின் மூலம் நிவின் பாலி மற்றும் அஜு வர்கீஸ் திரைத்துறையில் அறிமுகமாகினர்.

மீண்டும் 15 வருடங்கள் கழித்து தற்போது நிவின் பாலி மற்றும் அஜு வர்கீஸ் இணைந்து சர்வம் மாயா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்தை பஞ்சுவம் அதுபுத விளக்கும் படத்தை இயக்கிய அகில் சத்யன் இயக்கியிருந்தார். ப்ரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் கடந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி மக்களுடைய பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சர்வம் மாயா படம் வெளியான 10 நாட்களில் ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 
 

Leave a comment

Comment