• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காட்டு யானைகளை விரட்டியடிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் வனஜீவராசிகள் அதிகாரி கள் மீது குற்றச்சாட்டு

இலங்கை

அண்மைக்காலமாக அதிகமாக கிராமங்களுக்குள் புகும் காட்டு யானைகளை விரட்டியடிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில், பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன வனஜீவராசிகள் அதிகாரிகளுக்குக் குற்றம் சுமத்தியுள்ளார்.

புத்தளம் மாவட்ட விசேட அனர்த்த முகாமைத்துவக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதேவேளை, வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள், அலுவலகத் தொலைபேசி அழைப்புகளுக்குக் கூட பதிலளிப்பதில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியதுடன் இந்த குற்றச்சாட்டினையும் முன்வைத்துள்ளார்.

புத்தளம் மாவட்ட விசேட அனர்த்த முகாமைத்துவக் கூட்டம் நேற்று (03) பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் நடைபெற்றதுடன், இக்கூட்டத்தில் அப்பிரதேச மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.
 

Leave a Reply