TamilsGuide

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை

 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு கடும் பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஸ்காட்லாந்து, இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல், மின்சாரத் தடை மற்றும் சாலை மூடல் போன்ற இடையூறுகள் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக வடக்கு ஸ்காட்லாந்து பகுதிகளில் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, மலைப்பகுதிகளில் மிக அதிக அளவில் பனி குவியக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடுமையான வானிலை மாற்றத்தினால் முதியவர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், மூடிய சாலைகளில் பயணிக்க வேண்டாம் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அடுத்த வாரம் வரை நீடிக்கவிருக்கும் இந்தக் கடுமையான குளிர்காலச் சூழலை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  
 

Leave a comment

Comment