TamilsGuide

போராட்டத்தில் பங்கேற்பதற்கு சிறிதரன் உள்ளிட்டோர்க்கு நீதிமன்றம் தடை உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் , சட்டத்தரணி சுகாஸ், வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்ட 26 நபர்களுக்கு நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் தையிட்டியில் வழிபாட்டு இடத்தில் அல்லது பிரதான நுழைவாயிலில் அல்லது வீதியில் சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை மேற்கொள்வதற்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திஸ்ஸ பௌத்த விகாரை வளாகத்தில் வழிபாடுகளில் பங்கேற்பதற்கு வருகைதரும் மக்களுக்கும் எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாதென மல்லாகம் நீதவான் நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி நாளை வரை குறித்த தடையுத்தரவு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment