TamilsGuide

ஈரானில் அமைதியான முறையில் போராடுபவர்களை சுட்டுக் கொன்றால் அமெரிக்கா தலையிடும் - டிரம்ப் எச்சரிக்கை

ஈரானில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு வன்முறையில் அடக்கப்பட்டால், அவர்களைப் பாதுகாக்க அமெரிக்கா தலையிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

தனது சமூக ஊடக தளமான Truth Social இல் வெளியிடப்பட்ட அவர் வெளியிட்ட பதிவில், ஈரான் அமைதியான முறையில் போராடுபவர்களை சுட்டுக் கொன்றால், அது அவர்களின் வழக்கம் என்றாலும், அமெரிக்கா அவர்களின் உதவிக்கு வரும்.நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டாலருக்கு எதிரான நாணய மதிப்பு வீழ்ச்சி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார நெருக்கடியால் ஈரான் கடுமையாக பாதித்துள்ளது.

இதனை எதிர்த்து அரசை கண்டித்து கடந்த 28-ந் தேதி தொடங்கிய மக்கள் போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. முதலில் தலைநகர் தெஹ்ரானில் தொடங்கிய போராட்டம் , நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. குறிப்பாக கிராமப்புற மாகாணங்களில் போராட்டங்கள் நடந்தது.

பல இடங்களில் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது. தலைநகர் தெஹ்ரானில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள அஸ்னா நகரில் மக்கள் சாலைகளில் பொருட்களை போட்டு எரித்தனர்

ஈரானின் சஹார்மஹால் மற்றும் பக்தியாரி மாகாணத்தில் நடந்த போராட்டங்களில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிகிறது. போராட்டம்-வன்முறையில் இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர்.

ஈரான் மீது அமெரிக்கா விதித்த கடுமையான பொருளாதார தடைகளால் ஈரான் பல ஆண்டுகளாக நெருக்கடியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Leave a comment

Comment