டுபாயில் இருந்து கடத்தப்பட்ட தங்கம் மின்னணு சாதனங்களுடன் ஒருவர் கைது
இலங்கை
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தங்கம் மற்றும் மின்னணு உபகரணங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி நாடு திரும்பிய நபரொருவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த கைது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைதான நபர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.






















