புதுவருடத்தில் பாதுகாப்பு மையத்தில் தங்கியுள்ளமக்களை சந்தித்த ஜனாதிபதி
இலங்கை
அங்கும்புர மற்றும் கன்கொட்டுவ பகுதிகளில் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கான மீள்குடியேற்ற ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கண்டி, பூஜாபிட்டிய, வெல்கால ஸ்ரீ சுதர்சனராமய விகாரையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்திற்கு இன்று (01) பிற்பகல் சென்று அந்த மக்களிடம் நலன் விசாரித்தார்.
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து, அங்கும்புர, கன்கொட்டுவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 06 வீடுகள் முழுமையாகவும், 15 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்ததுடன், அதிக ஆபத்துள்ள வலயமாக அடையாளம் காணப்பட்ட அந்தப் பகுதியில் 30 வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டனர்.























