TamilsGuide

அம்பலங்கொடையில் தென்னை மரத்தில் மோதி கார் விபத்து

இலங்கையின் தென் பகுதி காலி வீதியின் அம்பலங்கொடை – கொடகம பகுதியில் இன்று (01) காலை இடம்பெற்ற கார் விபத்தொன்றில் அதன் சாரதி காயமடைந்துள்ளார்.

குறித்த கார் கொடகம பகுதியை கடந்து சென்றுகொண்டிருந்த போது, வீதியை கடக்க முயன்ற நபர் ஒருவரை காப்பாற்ற சாரதி முயற்சித்துள்ளார்.

இதன்போது கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த தென்னை மரமொன்றில் பலமாக மோதியுள்ளது.

இந்த விபத்தின் போது கார் தென்னை மரத்தில் மோதிய வேகத்தில், அதன் முன்பகுதி தரையிலும் பின்புறம் தென்னை மரத்தின் மேல் பகுதியை நோக்கியும் செங்குத்தாக நின்றது. இந்த விசித்திரமான விபத்துக் காட்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விபத்தில் காயமடைந்த காரின் சாரதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலன்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment