மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு அரசடியில் உள்ள வர்த்தக கடைத்தொகுதிக்கு முன்பாகவே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர் அக்கரைப்பற்று பகுதியைசேர்ந்த 21வயதுடைய முகுந்தன் சந்தோஸ் என்னும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து வந்திறங்கி அக்கரைப்பற்றுக்கு செல்ல இருந்தவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
நேற்று இரவு 11.00மணி வரையில் தங்களுடன் தொடர்பில் இருந்தார் என்றும் உயிரிழந்தவரின் தந்தையார் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரும் மட்டக்களப்பு தடவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது


