கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஷொஹாரா புகாரியின் வீட்டுக்குத் தேடிச் சென்ற கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலி பல்தசார் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவரை சந்தித்து தங்களுக்கு சாதகமாக வரவு செலவுத்திட்டத்தில் வாக்களித்தமைக்கு நன்றியை தெரிவித்திருந்ததுடன்,அவரின் சுக துக்கங்களையும் தற்போதைய நிலை தொடர்பில் விசாரித்து ஆறுதல் கூறினார்.
கொழும்பு மாநகர வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக மு.கா. பெண் உறுப்பினர் ஷொஹாரா புகாரி வாக்களித்திருந்தார். இதன் போது ஆளும் தரப்பு உறுப்பினர்கள் மேசையை தட்டி ஆரவாரம் எழுப்பினர். அவரது கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


