நாடாளுமன்றத்தில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில்
இலங்கை
நாடாளுமன்றத்தில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் நாடாளுமன்ற அதிககாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரும் அரசாங்க ஊழியர்களுக்கான உறுதியுரையை எடுத்துக்கொண்டனர்.
நாடாளுமன்றத்தின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதன் மூலம் சிறந்த சேவையை தொடர்ந்து வழங்கும் ஊழியர்களாக மாறுவதற்கு புத்தாண்டில் தைரியம் கிடைக்க வேண்டும் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன குறிப்பிட்டிருந்தார்.
ஒட்டுமொத்த நாட்டு மக்களும் புதிய மாற்றத்தை எதிர்பார்ப்பதனால் பத்தாவது நாடாளுமன்றத்திற்கு விசேடமான பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டிருந்தார்.
நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, நாடு என்ற ரீதியில் அபிவிருத்தி இலக்குகளை நோக்கிச் செல்லும்போது சட்டவாக்கம் என்ற ரீதியில் நாடாளுமன்றத்தின் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு விசாலமானது எனத் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வில் பிரதிச் சாபாநாயகர் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, நாடாளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, திணைக்களங்களின் பிரதானிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






















