TamilsGuide

கடந்த வருடத்தில் 5.6 சதவீதம் வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி

2025 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி 5.6 சதவீதம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) உறுதிப்படுத்தியுள்ளது.

வருடத்தின் இறுதி நாளான நேற்றைய வர்த்தக நிறைவில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306.29 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 313.83 ரூபாவாகவும் இருந்தது.

2024 டிசம்பர் 31 அன்று, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 288.32 ரூபாவாகவும், 297.01 ரூபாவாகவும் இருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment