யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றது.
அதன் போது, தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டு, உத்தியோகஸ்தர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்தனர்.
நிகழ்வினை தொடர்ந்து வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி , வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் சத்திய பிரமாணம் எடுத்து தமது கடமைகளை ஆரம்பித்தனர்.


