கனடாவில் 80 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்ற அதிர்ஸ்டசாலி
கனடா
கனடாவில் கடந்த 30ம் திகதி நடைபெற்ற லாட்டோ மேக்ஸ் சீட்டிழுப்பில் 80 மில்லியன் டாலர் ஜாக்பாட் பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
அந்த டிக்கெட் ஒன்டாரியோவின் லண்டன் நகரில் விற்கப்பட்டுள்ளது. 2024 மார்ச் மாதம் லாட்டோ மேக்ஸ் ஜாக்பாட் 80 மில்லியன் டாலராக உயர்த்தப்பட்ட பிறகு, ஒன்டாரியோவில் இந்த ஜாக்பாட் முதல்முறையாக வென்றுள்ளது.
மேலும், ஒரே ஒரு டிக்கெட் மட்டுமே ஜாக்பாட்டை வென்ற இரண்டாவது முறையும் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாக்பாட் வெற்றியாளர் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
வெற்றியாளர்கள் லொத்தர் சீட்டு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு தங்களது பரிசினை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.























