• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இசை அரசிகளில் சந்தேகமில்லாமல் முதலிடத்தில் இருப்பவர் பி.சுசீலாதான்.

சினிமா

டி.எம்.எஸ் பாடியவற்றில் என்ன பாட்டு பிடிக்கும் என்று கேட்டால், எதைச் சொல்வது, எதை விடுவது என்று குழப்பம் வரும். அப்படி அத்தனையுமே பிடித்தமான பாடல்கள்தான். அதுபோல பி.சுசீலாவின் பாடல்களிலும் எந்த பாட்டைச் சொல்வது, எதை விடுவது என்று தெரியாது.
‘ராதையின் நெஞ்சமே, கண்ணனுக்குச் சொந்தமே’ பாட்டிலிருந்துதான் பி.சுசீலாவைப் பிரத்தியேகமாகக் கேட்கலாம்.
அந்தப் பாடல் நம்மை எங்கோ இழுத்துக்கொண்டு போனது போல் இருக்கும்.. அந்தப் பாடலின் ராகமா, பி.சுசீலாவின் குரல் வளமா எதுவென்று தெரியவில்லை... நம்மை மயக்கத்தில் ஆழ்த்தியது. ‘மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ...’, ‘ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்’ என்று சொல்லிக்கொண்டே போகலாம். பி.சுசீலாவின் பாடல்களில் அவர் இழுக்கும் ராக ஆலாபனை அதியற்புதமாக இருக்கும். விதவிதமான சிரிப்புகளையே ராகமாக இசைப்பார். இது போல இன்னும் நிறையப் பாடல்கள்!
மற்ற எந்தப் பாடகிக்கும் இல்லாத ஒரு சிறப்பு இவரிடம் உண்டு. டி.எம்.எஸ். எப்படி எம்.ஜி.ஆருக்கு, சிவாஜிக்கு, ஜெய்சங்கருக்கு என நடிகர்களுக்கேற்பத் தன் குரலையும் பாணியையும் மாற்றிப் பாடினாரோ, அதே போல நடிகைகளுக்கு ஏற்பத் தன் குரலையும் பாணியையும் மாற்றிப் பாடியவர் பி.சுசீலா.
ஆனால், இதை எத்தனை பேர் கவனித்திருப்பார்கள் என்று
தெரியாது. .
ஆண் குரலில் கம்பீரமும், குழைவும் மாற்றிக் கொடுக்க முடிகிற அளவுக்குப் பெண் குரலில் சாத்தியம் இல்லை. என்றாலும், தன்னால் முடிந்தவரை அதைச் சாத்தியப்படுத்திக் காட்டியிருப்பார் பி.சுசீலா. அவர் சரோஜாதேவிக்குப் பாடுகிறபோது அதில் ஒரு கொஞ்சல் இருக்கும்; அதுவே தேவிகாவுக்குப் பாடுகிறபோது அதில் அத்தனைக் குழைவு இருக்காது. ஜெயலலிதாவுக்குப் பாடுகிறபோது அதில் ஒரு மிடுக்கு தெரியும்.

பி.சுசீலா ஒவ்வொரு நடிகைக்கும் பாடிய பாடல்களைத் தனித் தனித் தொகுப்புகளாகப் பிரித்துக்கொண்டு கேட்டால், நான் சொல்வதில் உள்ள உண்மை புரியும். உதாரணத்திற்கு ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ பாட்டில் ஜெயலலிதாவுக்கே உரிய மிடுக்கு பி.சுசீலாவின் குரலில் ஒலிப்பதைக் கவனியுங்கள். ‘லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்... தகதிமிதா’ பாட்டில் சரோஜாதேவியின் கொஞ்சல் இருப்பதைக் கவனியுங்கள்.
அவ்வளவு ஏன்... ‘அழகிய தமிழ் மகள் இவள்...’ பாடலில், ‘கோவை இதழ் இதோ இதோ... கொஞ்சும் கிளி அதோ அதோ’ என்று பி.சுசீலா பாடும்போது மஞ்சுளா மாதிரியே இருக்கும்.

இவருக்கு நிகர் இவரே தான்.
அதில் மாற்று கருத்து இல்லை.

Prashantha Kumar

Leave a Reply