TamilsGuide

நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு ரஷ்யர்கள் மீட்பு

அஹங்கம, கபலானா கடற்கரையில் கடலில் நீராடச் சென்ற இரண்டு ரஷ்ய நாட்டவர்கள் பலத்த நீர் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட பின்னர் மீட்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் நேற்று (30) பிற்பகல் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அஹங்கம பொலிஸ் பிரிவின் பொலிஸ் துறையின் உயிர்காக்கும் பிரிவில் இணைக்கப்பட்ட பல அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மீட்கப்பட்ட இரண்டு ரஷ்ய நாட்டவர்களும் 46 மற்றும் 12 வயதுடையவர்கள் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 

Leave a comment

Comment