TamilsGuide

எலோன் மஸ்க் - இஸ்ரேலிய பிரதமர் சந்திப்பு

உலக பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க்குடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திப்பின்போது தொழில்நுட்ப மேம்பாடு குறித்து இருவரும் பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பிரதமரும் மஸ்க்கும் இஸ்ரேலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் முன்னேற்றம் மற்றும் மேம்பாடு குறித்து விரிவாகப் பேசினர்” என்று நெதன்யாகுவின் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், “சைபர் மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் போலவே இஸ்ரேலை முன்னோக்கி நகர்த்தி இந்தத் துறையில் உலகளாவிய தலைவராக மாற்ற நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்று இஸ்ரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment