TamilsGuide

டித்வா சூறாவளியால் நாட்டின் சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபா இழப்பு – அரசாங்கம் தெரிவிப்பு

டித்வா சூறாவளியின் தாக்கத்தால் இலங்கையின் தேசிய சுகாதார அமைப்பு சுமார் 21 பில்லியன் ரூபா இழப்பைச் சந்தித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பல வைத்தியசாலைகள் உட்பட எட்டு சுகாதார நிறுவனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், அவற்றை மீண்டும் நிர்மாணிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.

உலக வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட சேதம் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
 

Leave a comment

Comment